இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: டெல்லி இலங்கை ஹைகமிஷனருடன் SDPI தலைவர்கள் சந்திப்பு

0

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: டெல்லி இலங்கை ஹைகமிஷனருடன் SDPI தேசிய தலைவர்கள் சந்திப்பு.! உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. குண்டு வெடிப்பை தொடர்ந்து அரசின் அத்துணை நடவடிக்கைகளுக்கும் துணை நிற்க்கும் முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகளை தடுத்து நிறுத்தாமல் காவல்துறையும் அரசும் வேடிக்கை பார்த்து வருகின்றன. இது சம்பந்தமாக இன்று தில்லியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று இலங்கை ஹைகமிஷனரை சந்தித்து
வன்முறைகளை உடனே நிறுத்தவும், முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் SDPI கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹைகமிஷனர் ஆஸ்டின் ஃபெர்னாண்டவுடனான இச்சந்திப்பில் தேசிய தலைவர் M.K. ஃபைஜி துணைத்தலைவர் ஷர்புத்தீன், தெஹ்லான் பாகவி, பொதுச் செயலாளர்கள் அப்துல் மஜீத். முகம்மது ஷஃபி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comments are closed.