இலங்கை: உயிர்த்த ஞாயிறை இரத்த ஞாயிறாக்கிய பயங்கரவாதம்

0

இலங்கை: உயிர்த்த ஞாயிறை இரத்த ஞாயிறாக்கிய பயங்கரவாதம்

மிக அண்மைக் காலத்தில் மரணித்த பேராசிரியர் லோனா தேவராஜா இலங்கையின் பிரபலமான வரலாற்று ஆய்வாளர் இருந்தார். அவர் எழுதிய மிகப் பிரபலமான நூல் ஜிபிணி விஹிஷிலிமிவிஷி ளிதி ஷிஸிமிலிகிழிரிகி: ளிழிணி ஜிபிளிஹிஷிகிழிஞி சீணிகிஸி ளிதி ணிஜிபிழிமிசி பிகிஸிவிளிழிசீ 900&-1915 ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை முஸ்லிம் சமூகம் உரிமை கோரிக் கொண்டிருந்த சினேகப்பூர்வம் மிகுந்த வரலாறு கடந்த 21ம் தேதி ஈஸ்டர் ஞாயிறோடு வெட்டிச்சாய்க்கப்பட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில்தான் நியூசிலாந்து, கிறைஸ்ட்சர்ச் நகர வெள்ளிக்கிழமை தாக்குதலின் கொடூரங்களை நமது வாழ்நாளின் துயரமாகக் காணநேர்ந்தது. அங்கே முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டது. அதன் கொடூரத்தின் நிழல்கள் மறையும் முன்னே இலங்கையில் மற்றுமொரு கொடூரம் நிகழ்ந்தேறியிருக்கிறது. இத்தாக்குதல்களில் இலங்கையில் பல இனத்தினர், பல நாட்டினர் கொல்லப்பட்டபோதும் பெரும்பாலும் கிறிஸ்தவ சமூகமே இலக்காக்கப்பட்டுள்ளது. தமது அமாக் செய்தித் தளத்தினூடாக தாக்குதலைப் பொறுப்பேற்றிருக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் கிறைஸ்ட்சர்ச் தாக்குதலுக்கான பழிவாங்கலே இலங்கைத் தாக்குதல்கள் எனக் கூறியுள்ளனர். தமது அறிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அப்பாவிக் கிறிஸ்தவர்களை சிலுவை வீரர்கள் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

நடந்தது என்ன?

21.4.2019 ஞாயிறு அன்று கிறிஸ்தவர்களின் புனித நாள். பெரிய வெள்ளியை அடுத்த ஞாயிறு, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டரை கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கும் திருநாள். அன்றைய தினம் இலங்கையின் முக்கிய தேவாலயங்களும் வழிபாட்டு நேரங்களுமே தீவிரவாதிகளின் பிரதான இலக்காகக் காணப்பட்டது.

அன்றைய துயரத்தின் முதல் தாக்குதல் கொழும்புக்கு வடக்கேயுள்ள கட்டான, புனித அந்தோனியார் ஆலயத்தில் காலை 8.45க்கு வழிபாடுகள் துவங்கியதுமே நிகழ்த்தப்பட்டது. இந்த ஆலயம் இலங்கைக் கத்தோலிக்கர்களின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடமாகும்.

அடுத்த தாக்குதல் கொழும்பிலிருந்து வடக்கே பெரும்பான்மையாக கத்தோலிக்கர்கள் வசிக்கும் நீர்கொழும்பு, கொச்சிக்கடை புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடத்தப்பட்டது.

மூன்றாவது தாக்குதல் புரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவர்களின் பிரதான வழிபாட்டிடமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அமைந்துள்ள ஸயன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்டது.

தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களே வீரியம் மிக்கதாகவும் அதிக உயிர்ச்சேதம் விளைவித்துமிருக்கின்றன.

இவற்றோடு கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதிகளான ஷாங்ரிலா, சினமன் கிரேண்ட், கிங்ஸ்பெரி ஆகியவற்றிலும் காலைப்பொழுதிலேயே திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஓரிரு மணிநேர இடைவெளிக்குள் கொழும்பிலும் தூர இடங்களிலுமென நிகழ்ந்த கொடூர குண்டுத் தாக்குதல்களால் நாடே உறைந்துபோனது.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.