இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: துபாயில் 5 பேர் கைது!

0

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில், கிறிஸ்துவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது. இதில் 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

இதை தொடர்ந்து, நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்தவாறு இந்த தாக்குதல்களுக்கு துணையாக இருந்த சிலரையும் இலங்கை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவங்களுக்கு பிறகு தேடபட்ட நிலையில் சிலரை அந்நாட்டு அரசு குற்றவாளிகளாக அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை துபாயில் 5 பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இன்று காலை அவர்களை கொழும்புவுக்கு அழைத்து வந்துள்ளதாக, இலங்கை காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.