இலங்கை குண்டுவெடிப்பு: மிகைப்படுத்திய செய்திகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்

0

அகில இலங்கை ஜாமியத்துல் உலமா, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து கொள்ளுப்பிட்டி மென்டரின் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தின. இதில் இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பேசிய அமைச்சர் ரவூப் ஹக்கீம்,” ஊடகங்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதோடு மிகைப்படுத்திய செய்திகளை வெளிக்காட்டுவதை தவிர்த்து நாட்டை நல்ல பாதைக்கு கொண்டுச்செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த தற்காப்பு ஆயுதங்கள் முஸ்லிம்களின் வீடுகளில் இருந்து தேடுதலின் போது கிடைத்தால் அதனைக்காட்டி பயங்கரவாதத்திற்கு தயாராகும் சமூகமாக முஸ்லிம் சமூகம் காட்டப்படுவது வேதனையானது. நடுநிலைத் தன்மையுடன் இந்த விஷயங்களை பார்க்கப்பட வேண்டும்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கூண்டோடு ஒழிக்கவேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Comments are closed.