இலங்கை குண்டுவெடிப்பு: ஹிஜாப் அணிந்துவந்த ஆசிரியைகளுக்கு பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

0

ஹபாயா மற்றும் ஹிஜாப் ஆடையுடன், தாங்கள் பணியாற்றும் பள்ளிக்குள் நுழைய தடுத்ததன் காரணமாக, இலங்கையின் மேல் மாகாணத்திலுள்ள பள்ளியில் ஒன்றில் பணியாற்றி வந்த 10 ஆசிரியைகள், நேற்று செவ்வாய்கிழமை வேறு பாள்ளிகளுக்கு மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த்யுள்ளது.

அவிசாவளை – புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலம் என்ற பள்ளியில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள், பணிக்கு சென்றபோது, ஹபாயா மற்றும் ஹிஜாப் அணிந்துக்கொண்டு பாள்ளிக்குள் செல்லக்கூடாது என்று, நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அந்த பாடசாலையில் கற்கும் மாணவர்களின் பெற்றோரும், பள்ளியில் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் இணைந்து அவர்களை தடுத்ததாக, மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலியின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியைகள் அனைவரும் ஹபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு செல்வது வழக்கமாகும். ஆனால், நேற்று “புடவை அணிந்து வந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்” என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தங்களை பணி செய்ய விடாமல் திருப்பி அனுப்பப்பட்ட ஆசிரியைகள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக, மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலியிடம் முறையிட்டனர்.

இதனையடுத்து, மேல் மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலய பள்ளி அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளை நேற்று அழைத்த ஆளுநர் ஆஸாத் சாலி, இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

தங்ளை அவமதித்த பள்ளிக்கு, இனி பணியாற்ற செல்லப்போவதில்லை என்று, பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் உறுதியாக தெரிவித்துள்ளானர். சம்பந்தப்பட்ட 10 ஆசிரியைகளுக்கும் தனது உத்தரவால், நேற்றைய தினம் வேறு பள்ளிளுக்கு உடனடி இடமாற்றங்கள் வழங்கப்பட்டது என ஆளுநர் ஆசாத் சாலி பிபிசி-யிடம் கூறினார்.

“அடையாளத்தை மறைக்கும் வகையில் முகத்தை மறைப்பதை, அரசாங்கம் தடை செய்வதற்கு முன்னதாகவே, மேல் மாகாணப் பள்ளிகளில் முகத்தை மறைக்கும் வகையில் யாரும் ஆடை அணிந்து வரக்கூடாது என்று நான் அறிவித்தேன். ஆனால், அந்த பள்ளியில் முகத்தை வெளிக்காட்டும் வகையில் ஹிஜாப் அணிந்து வந்த ஆசிரியைகளுக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, புடவை அணிந்து வருமாறும் அந்த ஆசிரியைகளை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் ஆசாத் சாலி தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் அந்த பள்ளியின் துணை தலைவர் பிபிசி-யிடம் பேசுகையில்; “நடந்த சம்பவத்துக்கும் பள்ளி தலைவர், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் தொடர்பு கிடையாது. பாடசாலையின் நுழைவாயிலுக்கு வெளியில் நின்றிருந்த பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள்கள்தான், இதனுடன் சம்பந்தப்பட்டார்கள்” எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஏப்ரல் 21-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்கதல்களை அடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைவரத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம்களின் கலாசாரங்களை ஒழிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர், தங்களின் அடையாளத்தை மறைக்கும் வகையில் முகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஆனால் ஹபாயா மற்றும் ஹிஜாப் அணிவதற்கு எவ்வித தடைகளும் இல்லை.

Comments are closed.