இலங்கை தாக்குதால் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக கருத கூடாது: பாராளுமன்ற உறுப்பினர்

0

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை கவலைக்குரியதாகும் என இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் கூறியுள்ளார். மேலும் இந்த தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கருத்தில் கொண்டு முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல்களை மேற்கொண்ட குழுவை முஸ்லிம் பயங்கரவாதிகள் என ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மோசமான தாக்குதல் சம்பவங்கள் பெரும் துயரமான சம்பவமாக அமைந்துள்ளது. அனைவருக்கும் பொதுவான கொள்கையொன்றை உருவாக்க வேண்டுமானால் மீண்டும் இன, மத ரீதியான அடிப்படைவாத செயல்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.