இலங்கை தாக்குல் மனித குலத்திற்கே எதிரானது! பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு கடும் கண்டனம்!

0

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குல் மனித குலத்திற்கே எதிரானது! பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு கடும் கண்டனம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் 2019 ஏப்ரல் 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்றது. மாநில தலைவர் வி. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கி. ஹாலித் முகமது வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

  1. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குல் மனித குலத்திற்கே எதிரானது. கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் மனித குலத்திற்கே எதிரானது. கோரமான இத்தாக்குதலுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது. இலங்கை மக்களின் துயரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் இணைந்து நிற்கின்றது என்பதை இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கின்றது.

இந்த பயங்கரவாத செயலில் தொடர்புள்ளதாக ஒன்பது நபர்களின் புகைப்படத்தை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. இதில் அமரா மஸ்ஜித் என்ற பெண்ணின் புகைப்படம் தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று, இறந்தவர்களின் எண்ணிக்கையையும் இலங்கை அரசு தவறுதலாக அதிகப்படுத்தி வெளியிட்டு பின்பு மாற்றிக் கொண்டது.

மேலும், பத்து நாட்களுக்கு முன்பாகவே இந்த தாக்குதல் குறித்து இந்தியா எச்சரிக்கை செய்திருந்தும் இலங்கை அரசு போதிய கவனம் எடுக்கவில்லை. இலங்கை அரசின் இது போன்ற நடவடிக்கை பல்வேறு கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

தற்போது மிஷிமிஷி என்ற பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது போன்ற பயங்கரவாத, மனித தன்மையற்ற செயல்களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதித்தது கிடையாது.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.