இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு

0

இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு

ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அரசியல் ரீதியில் ஒருங்கிணைய தலைவர்கள் அறைகூவல்!

அரசியல் அதிகாரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மற்றும் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில், ‘அரசியலாய் அணி திரள்வோம்! அதிகாரத்தை வென்றெடுப்போம்!’ என்ற முழக்கத்தோடு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னரில் அக்டோபர் 21 அன்று நடைபெற்றது.

மாநாட்டின் முதல் நிகழ்வாக காந்தியடிகள் அரங்கில் ‘நெருக்கடிக்குள்ளாகும் மதச்சார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இக்கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கு. இராமகிருட்டிணன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர், மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஜமாத்தே இஸ்லாமி ஆலோசனை குழு உறுப்பினர் ஜலாலுதீன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிக்கோ இருதயராஜ், மே17 இயக்கத்தின் அருள் முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் காலித் முகமது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் மன்பயீ ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியாக மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் நன்றியுரையாற்றினார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.