இஸ்ரத் ஜஹான் என்கெளண்டர் வழக்கை விசாரித்த CBI குழுவில் இருந்த IPS அதிகாரி சதீஷ் வெர்மா அந்த என்கெளண்டரை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட படுகொலை என்று கூறியுள்ளார். இவர் இந்த வழக்கை விசாரிக்க SIT(Special Investigation Team) இல் குஜராத் உயர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டவர ஆவார்.
“எங்களுடைய விசாரணையில் இஸ்ரத் மற்றும் அவருடன் இருந்த மூன்று பேரும் IBயினால் என்கெளண்டருக்கு சில நாட்களுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிந்தோம். இன்னும் சொல்லப்போனால் தீவிரவாதிகள் என்று கூறப்பட்டவர்களுடன் ஒரு பெண்ணும் சேர்க்கப்படுவார் என்ற தகவல் IBயினரிடமே இல்லை. அவர்களிடம் இஷ்ரத் குறித்த எந்த உளவுத்துறை தகவலும் இல்லை. இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லபப்ட்டுள்ளனர்” என்று வெர்மா கூறியுள்ளார்.
மேலும் அவர் ” இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால் தேசியவாதம் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலை எழுப்பி ஒரு அப்பாவி பெண்ணை இழிவு படுத்தி அதன் மூலம் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.இந்த போலி என்கெளண்டரில் குற்றம் சாட்டப்பட்ட உளவுத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.” என்று கூறியுள்ளார்.
மேலும் இஷ்ரத் ஜஹான் லஷ்கரின் தற்கொலைப்படை தீவிரவாதி என்ற கூற்றையும் நிராகரித்த இவர், இஷ்ரத் தனது வீட்டில் இருந்து பிரிந்து ஜாவித் சேக் போன்றோருடன் சேர்த்ததாக கூறப்பட்டது 10 நாட்கள் மட்டும் தான் என்றும் தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கு பயிர்ச்சியளிக்க மிகவும் நீண்ட காலம் தேவை என்றும் ஒரு 303 ரைஃபிளை ஒழுங்காக சுடுவதர்க்கே 15 நாள் பயிற்சி தேவை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இஷ்ரத் ஜஹான் தனது வீட்டை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்பட்ட காலம் தீவிரவாத பயிற்சி பெறுவதற்கு போதுமானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்ற வாரம் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை லஷ்கர் தீவிரவாதிகள் இந்தியாவிற்கு வரவைக்கப்பட்டனர் என்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு கூறியிருந்தார். இதை மறுத்த வெர்மா, அவர் ஒன்றும் உளவுத்துறை அதிகாரி இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: இஸ்ரத் ஜஹான்