இஷ்ரத் ஜஹான் என்கெளவுண்டர் தொடர்பான கோப்புகளை கண்டுபிடிக்க கால அவகாசம் நீட்டிப்பு

0

இஷ்ரத் ஜஹான் என்கெளவுண்டர் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரி பி.கே.பிரசாத் அவர்களுக்கு அந்த கோப்புகளை கண்டுபிடிக்க கால அவகாசத்தை நீட்டித்துள்ளது மத்திய அரசு.

இந்த முடிவு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதின் பேரில் நரேந்திர மோடியின் உத்தரவிற்கிணங்க நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கால அவகாச நீட்டிப்பை உள்துறை செயலாளர் ராஜீவ் மேஹ்ரிஷி உள்துறை அமைச்சகத்திடம் கோரியுள்ளார்.

சமீபத்தில் காணமல் போன இந்த கோப்புகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பி,கே. பிரசாத், சாட்சியங்களிடம் இந்த கோப்பு காணமல் போனது பற்றி விசாரணை நடத்தும் பொது தான் கேட்கப்போகும் கேள்விகளையும் அதற்கான பதில் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தி நிறுவனம் ஒன்று பி.கே.பிரசாத்தின் இந்த செயலை பதிவு செய்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விசாரணை அதிகாரி பி.கே. பிரசாத் மீது இப்படி குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்க மத்திய உள்துறை அமைச்சகம் பி.கே.பிரசாத்தை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவரை மாற்றுவது இவ்வழக்கை இன்னும் தாமதிக்கும் என்றும் கூறியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், இது முன்னர் தான் கூறியவைகளை உறுதி படுத்துகிறது என்றும் பா.ஜ.க அரசு இந்த விஷயத்தை வைத்து சர்ச்சையை ஏற்படுத்த முயல்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.