இஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் வழக்கு

0

இஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் வழக்கு:

காவல்துறை அதிகாரிகளை

விசாரணை செய்ய அனுமதி மறுப்பு!

இஷ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.வன்சாரா மற்றும் என். கே. அமீன் ஆகியோரை விசாரணை செய்வதற்கு ஒப்புதல் அளிக்க குஜராத் அரசாங்கம் மறுத்துவிட்டது என்று சிபிஐ நீதிமன்றத்தில் கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இந்த அதிகாரிகளை விசாரணை செய்ய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 197வது பிரிவின் கீழ் அனுமதி வழங்க குஜராத் அரசாங்கம் மறுத்துள்ளது.

இவ்விருவருக்கும் எதிரான வழக்கு விசாரணையை நிறுத்துமாறு எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மார்ச் 26 அன்று இதற்கான மனுவை தாக்கல் செய்யுமாறு கூறி உள்ளது.

ஜூன் 15, 2004 அன்று மும்பையை சேர்ந்த 19 வயது பெண்மணி இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வர் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய வந்ததாகக் கூறி குஜராத் காவல்துறை இவர்களை என்கௌண்டரில் சுட்டுக் கொன்றது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ ஏழு நபர்களை குற்றவாளிகளாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு இருந்தது.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Leave A Reply