இஷ்ரத் ஜஹான்: காணாமல் போன ஆவணங்கள் மீதான ஜோடிக்கப்பட்ட விசாரணை

0

இஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் வழக்கு தொடர்பாக காணாமல் போன ஆவணங்கள் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் பி.கே பிரசாத் என்கிற அதிகாரியை நியமித்திருந்தது. இவர் காணாமல் போன ஆவணங்கள் குறித்து விசாரித்து அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருந்தார். ஆனால் இவர் நடத்திய விசாரணை அனைத்தும் முற்றிலுமாக ஜோடிக்கப்பட்டவை என்கிற உண்மை The Indian Express நாளேடு கண்டறிந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி மாலை 3:45 அளவில் The Indian Express நிருபர் ஒருவர் இந்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரி பி.கே.பிரசாத்திற்கு வேறொரு செய்தி தொடர்பாக தொலைபேசி அழைப்பு ஒன்றை விடுக்கிறார். அந்த சமயத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரை அழைப்பில் காத்திருக்கக் கூறி வேறொரு அழைப்பில் இஷ்ரத் ஜஹான் வழக்கு தொடர்பான விசாரணை குறித்து அவர் பேசியதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் பதிவு செய்துள்ளார்.

தனது அழைப்பில் பிரசாத் தான் விசாரணை நடத்தவிருக்கும் அதிகாரி குமாரிடம் தான் கேட்கப்போகும் கேள்விகள் என்ன என்பதையும் அதற்க்கான பதில் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் அவரே அந்த அதிகாரியிடம் விவரித்துள்ளதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் பதிவு செய்துள்ளார்.

அந்த அழைப்பில், “அந்த பேப்பர்களை பார்த்தீர்களா?” என்கிற கேள்விக்கு, ” நீங்கள், நான் அதை பார்க்கவில்லை என்று கூற வேண்டும். அவ்வளவுதான். எளிமையான் விஷயம்” என்று கூறியுள்ளார்.
“நீங்கள் அந்த பேப்பரை பார்கவே இல்லை என்று கூற வேண்டும் அல்லது அந்த கோப்புகளை உங்கள் வாழ்க்கையில் கையாளவே இல்லை என்று கூற வேண்டும். இது தான் உங்களிடம் இருந்து எனக்கு வேண்டும்”

“அடுத்து மற்றொரு கேள்வி. அந்த ஆவணங்களை தனியாக வைக்கக் கூறி உங்களிடம் யாராவது கொடுத்தார்களா என்று கேட்கப்படும். அதற்கு நீங்கள், இல்லை, யாரும் என்னிடம் தரவில்லை என்று கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த பதில் அல்லாமல் வேறு பதிலை கூறினால் அந்த அதிகாரி குறித்த சந்தேகம் எழும் என்றும் பிரசாத் அந்த அதிகாரியிடம் விளக்குகிறார்.

இது குறித்து பிரசாத் தொடர்பு கொண்ட அதிகாரி குமார் அவர்களை செய்தியாளர்கள்ள் தொடர்பு கொண்ட போது தனக்கு பிரசாத் விசாரணை தொடர்பாக அழைப்பு விடுத்திருந்தார் என்று கூறியவர் அதுகுறித்து கூடுதல் தகவல்களை தர மறுத்துவிட்டார்.

இது குறித்து பி.கே.பிரசாத் கருத்து தெரிவிக்கையில், தான் நீதியான, சுதந்திரமான விசாரணை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். கடந்த மே மாதம் 31 ஆம் தேதி ஓய்வு பெற இருந்த இவருக்கு ஜூலை 31 வரை பனி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பி.கே.பிரசாத்தின் விசாரணை முடிவுகளை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கோரியவருக்கு அவரது குடியிமையை நிரூபிக்கக் கூறி உள்துறை அமைச்சகம் பதிலளித்திருந்தது.( பார்க்க செய்தி)

பி.கே.பிரசாத்தின் தொலைபேசி அழைப்பு:

Comments are closed.