இஷ்ரத் ஜஹான் குறித்து கேள்வி எழுப்பிவரை “நீங்கள் இந்தியரா?” என்று கேட்ட உள்துறை அமைச்சகம்.

0

இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுன்டர் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியவரிடம், ”நீங்கள் இந்தியர்தானா?” என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு குஜராத்தில் மாநிலத்தில் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பான ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தில் இருந்து காணாமல் போனது. பின்னர் இதனை விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு நபர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இந்த விசாரணை குழு தாக்கல் செய்த அறிக்கையின் நகல்களை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்பியிருந்தார்.

அவரது மனுவிற்கு பதில் அளிக்காமல் அவரது குடியுரிமையை பற்றிய கேள்வி எழுப்பியுள்ளது உள்துறை அமைச்சகம். அதில் ”நீங்கள் இந்தியர் என்பதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்” என்று கூறியுள்ளது. இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுன்டர் குறித்த ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தில் இருந்து கடந்த 2009ம் ஆண்டு மாயமானதாக கூறப்பட்டது. அந்த கோப்புகள் குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் பிரசாத் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

இந்த கோப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த பிரகாஷ், நேற்று தனது விசாரணை அறிக்கையை உள்துறை செயலாளர் ராஜிவ் மகரிஷியிடம் சமர்ப்பித்தார். அதில் மாயமான 5 கோப்புகளில் ஒரு தாள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கோப்பு தெரிந்தோ அல்லது தெரியாமலோ எடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது நீக்கப்பட்டிருக்கலாம் என இந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2009ல் செப்டம்பர் 18 முதல் 28ம் தேதிக்குள் மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, இந்த ஆவணங்கள் காணாமல் போனதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

Comments are closed.