இஷ்ரத் ஜஹான் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு பணி நீட்சி

0

இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் குஜராத்தின் காவல்துறையில் தற்காலிக காவல்துறை டைரக்டர் ஜெனெரலாக பணியாற்றி வரும் பி.பி.பாண்டேவுக்கு அவர் ஓய்வு பெரும் நாளான அன்று மூன்று மாதங்களுக்கு பணிநீட்சி செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநில அரசின் இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. தற்போது ஊழல் எதிர்ப்பு படையை தலைமை தாங்குவதுடன் குஜராத் மாநில காவல்துறையின் டைரக்டர் ஜெனரலாகவும் பணியாற்றி வருகிறார்.

1980 ஆம் ஆண்டின் IPS அதிகாரியான இவர் 2013 ஜூலை மாதம் இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் தொடர்பாக கைது செய்யப்பட்டார். 19 மாதங்கள் சிறைவாசத்திற்கு பின்னர் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிணையில் வெளியானார். அவர் பிணையில் இருந்து வெளியானதும் அவருக்கு குஜராத் அரசு பதவி உயர்வு வழங்கியதோடு கூடுதல் பொறுப்பாக குஜராத் மாநில காவல்துறையின் டைரக்டர் ஜெனெரல் பதவியையும் கொடுத்தது.

இவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டதை எதிர்த்து காவல்துறை உயர் அதிகாரி ஜூலியோ ரிபெரோ குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். ஆனால் அவரது மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

சி.பி.ஐ யின் சிறப்பு நீதிமன்றத்திடம் தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு பாண்டே முறையிட்டுள்ளார்.

Comments are closed.