இஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் வழக்கு: இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் மீதான சம்மன் ரத்து -சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

0

இஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் வழக்கு: இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் மீதான சம்மன் ரத்து -சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

2004 ஆம் ஆண்டு போலி மோதலில் கொலை செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹான் வழக்கில் இரண்டு உளவுத்துறை அதிகாரிகளுக்கு கீழ் நீதிமன்றம் பிறபித்த சம்மனை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

உளவுத்துறை அதிகாரிகள் ராஜீவ் வாங்கடே மற்றும் T.S.மிட்டல் ஆகியோருக்கு எதிராக கீழ் நீதிமன்றம் பிறப்பித்த இந்த சம்மனை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி J.B.பாண்ட்யா ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த உளவுத்துறை அதிகாரிகள் இஷ்ரத் ஜஹானின் போலி என்கெளண்டர் நடைபெற்ற போது துணை மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர்.

இவர்கள் தங்களுக்கு எதிராக கீழ் நீதிமன்றம் பிறபித்த சம்மனுக்கு எதிராக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்தனர். அதில் அந்த நீதிமன்றம் சிபிஐ குற்றப் பத்திரிகையை கணக்கில் கொள்ளவில்லை என்றும் கிரிமினல் குற்ற நடவடிக்கை முறையின் படி மத்திய அரசு தங்களை விசாரிக்க எந்த அனுமதியும் கொடுத்திடாத பட்சத்தில் தங்களுக்கு எதிராக சம்மன் வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரல்லாது ராஜிந்தர் குமார் மற்றும் M.S.சின்ஹா என்ற மேலும் இரண்டு உளவுத்துறை அதிகாரிகளுக்கும் கீழ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இவர்கள் இருவரும் அந்த சம்மனுக்கு எதிராக மனு அளிக்கவில்லை. தற்போது இந்த இரண்டு அதிகாரிகள் மீதான சம்மன் ரத்து செய்யப்பட்ட நிலையில் அது நான்கு அதிகாரிகளுக்கும் பொருந்துமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த நான்கு அதிகாரிகள், கொலை, சதித்திட்டம் தீட்டுதல், சட்ட விரோத காவல், ஆட்கடத்தல் ஆகிய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.