இஷ்ரத் ஜஹான் வழக்கில் இருந்து பாண்டே வெளியேற்றம். சி.பி.ஐ. க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

0

இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் இருந்து குஜராத் டி.ஜி.பி. பாண்டேவை சி.பி.ஐ. விடுத்வித்தது தொடர்பாக பதிலளிக்க கூறி இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சி.பி.ஐ.க்கு இந்த நோட்டீசை வழங்கிய சிறப்பு நீதிபதி எம்.கே.பாண்ட்யா விடம் இது தொடர்பாக வருகிற ஜனவரி 20 ஆம் தேதிக்குள் பதிலளிப்பதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.

இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டி.ஜி.பி.பாண்டேவின் பிணை நிபந்தனைகளில் ஒவ்வொரு வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5  மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுள்ளது. இதனை தளர்த்துவது தொடர்பான விண்ணப்பத்தின் மீது தங்களது உத்தரவையும் தற்போது நிறுத்தி வைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

இந்த வழக்கில் மற்றொரு முன்னேற்றமாக கொலை செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹானின் தாயார் சாஷமீமா கவ்சர், டி.ஜி.பி. பாண்டேவை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க தொடரப்பட்ட விண்ணப்பத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் விண்ணப்பம் விடுத்துள்ளார்.

அவர் தனது விண்ணப்பத்தில், பாதிக்கப்பட்டவரின் தாய் என்ற முறையிலும் ரிட் மனுதாரர் என்கிற முறையிலும் அவரும் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக இணைக்கப்பட வேண்டும் என்றும் இவ்வழக்கு விசாரணையில் அவருக்கும் ஒரு வாய்ப்புத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து பாண்டேவின் பிணை மனு மாற்றத்திலும், ஷமீமா கவ்சரின் மனுவின் மீதும் வருகிற 20 ஆம் தேதி முடிவெடுக்க உள்ளதாக தெரிகிறது.

இஷ்ரத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாண்டே தற்போது பிணையில் வெளியே உள்ளார். இவர் தனக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டு தான் டி.ஜி.பி. யாக பணிவுயர்வு பெற்றுள்ளத்தை தன்னை வழக்கில் இருந்து விடுவிப்பதற்கான காரணமாக சுடுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட 105 சாட்சிகளில் எவரும் தனது பெயரை குறிப்பிடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் தனக்கு பிணை கிடைத்ததும் தான் குஜராத் காவல்துறையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அம்மாநில அரசு தன்னை டி.ஜி.பி. யாக பணிவுயர்வு செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில், இந்திய உளவுத்துறை அதிகாரிகளாக உளவுத்துறையின் சிறப்பு கூடுதல் இயக்குனர் ரஜிந்தர் குமார் உட்பட குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அது இன்னும் நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இஷ்ரத் ஜஹான் வழக்கு தொடர்பாக 2013 இல் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பாண்டே, டி.ஜி.வன்சாரா, ஜி.எல்.சிங்கால் உட்பட ஏழு குஜராத் காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்தது. இவர்கள் மீது சதித்திட்டம் தீட்டுதல், கடத்தல் மற்றும் கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

இஷ்ரத் ஜஹான் குறித்த செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Comments are closed.