இஸ்தான்புல் விமான நிலையத்த்தில் குண்டு வெடிப்பு: 36 பேர் பலி

0

துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் விமானநிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

செவ்வாய் கிழமை இரவு 10 மணிக்கு விமான நிலையத்தில் நுழைந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள் விமான நிலைய காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பின்னர் ஒவ்வொருவராக தாங்கள் அணிந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் இரண்டு காவல்துறையினர் உட்பட சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது. மேலும் 88 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இது இந்த வருடத்தில் மட்டும் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் நடந்த நான்காவது குண்டு வெடிப்பாகும். இந்த தாக்குதலை அடுத்து சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்துகான் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுவரை இந்த குண்டுவெடிப்பிற்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலை அடுத்து துருக்கி விமான நிலையத்தில் அனைத்து விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் இரண்டு பாதுகாப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதில் ஒரு தாக்குதலில் தற்கொலைப்படை தீவிரவாதியை காவலர் ஒருவர் சுடுகிறார். தரையில் விழுந்த தீவிரவாதி சில வினாடிகளில் தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்வது போல காட்சி பதிவாகியுள்ளது.

தங்கள் மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கத்தையும் குர்து போராளிகளையும் குற்றம் சாட்டியுள்ளது துருக்கி. என்றாலும் தற்போது நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

கடந்த மார்ச் மாதம் 32 உயிரை பலிகொண்ட ப்ருச்செல்ஸ் விமான நிலைய தாக்குதலை அடுத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. இஸ்தான்புல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது ப்ருசெல்ஸ் விமான நிலையம்.

Comments are closed.