இஸ்ரத் ஜஹானுக்கு எதிரான ஹெட்லியின் வாக்குமூலம் நம்பத்தகுந்தது அல்ல – கோபிநாத பிள்ளை!

0

இஸ்ரத் ஜஹானுக்கு எதிராக மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டேவிட் கோல்மான் ஹெட்லி அளித்துள்ள வாக்குமூலம் நம்பத்தகுந்தது அல்ல என்று குஜராத் போலி என்கவுண்டரில் இஸ்ரத்துடன் கொல்லப்பட்ட பிரானேஷ் குமார் என்கிற ஜாவேத் ஷேக்கின் தந்தை கோபிநாத பிள்ளை தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,’பிராணேஷ்(ஜாவேத் ஷேக்) போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டார்.அதில் சந்தேகம் இல்லை.பா.ஜ.க அரசு தன்னை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியே இந்த வாக்குமூலம்’ என்று தெரிவித்தார்.

Comments are closed.