ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவிப்பால் திணறும் இஸ்ரேல்

0

சட்ட விரோத இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களில்  ‘சட்ட விரோத குடியிருப்பில் தயாரிக்கப்பட்டது’ என்று அச்சிட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

பொருட்களின் தயாரிப்பு லேபல்கலுக்கான புதிய வரைமுறையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், சர்வேதச சட்டத்திற்கு இணங்க ஐரோப்பிய ஒன்றியம் 1967 க்குப் பிறகு இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை இஸ்ரேல் என்று அங்கீகரிக்காது என்றும் அது சட்ட விரோத ஆக்கிரப்பே என்றும் அதனால் அவ்வாறே பொருட்களின் லேபல்களில் அச்சிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த சட்ட விரோத ஆக்கிரமிப்பு பகுதிகளில் கோலான் பகுதி, காஸா, ஜெருசலேம் உள்ளிட்ட மேற்குக்கரை பகுதிகளும் அடங்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிலைப்பாடு இஸ்ரேலை சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் இஸ்ரேலுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்களால் முன்னெடுத்து நடத்தப்படும் BDS இயக்கத்திற்கும் இது பெரும் முன்னேற்றமாக கருதப்படுகிறது. BDS இயக்கம் இஸ்ரேலின் தயாரிப்புகளை புறக்கணிக்க கோரி சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பிரச்சார பரப்புரை செய்யும் இயக்கம். இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் மற்றும் அப்பாவி குழந்தைகள், பெண்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைக்கு எதிரானவர்கள் இஸ்ரேலை எதிர்க்கும் பொருட்டு இஸ்ரேலின் பொருட்களை வாங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்வது இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த ஒரு அறிவிப்பினால் இஸ்ரேல் செய்வதறியாது நிற்கிறது, இந்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் பெருமளவு  லாபி செய்தும் எந்த பலனும் ஏற்படாதது இஸ்ரேலுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இஸ்ரேலின் பாதுகாவலனான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிலைப்பாடு குறித்து இஸ்ரேல் அதிர்ச்சி அடைவது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு, சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் சார்ந்த தனது பார்வையும் அதுதான் என்று கூறியுள்ளது. மேலும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளது.

Comments are closed.