இஸ்ரேலின் மின்சார கட்டமைப்பின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல்

0

சைபர்டெக் 2016 மாநாட்டில் பேசிய இஸ்ரேலின் அமைச்சர் யுவல் ச்டீநிட்ஸ் கூறுகையில் இதுவரை கண்டிராத மிகப்பெரியதொரு சைபர் தாக்குதலை சந்தித்துள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த தாக்குதலுக்கு காரணமான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தாக்குதலின் தன்மையை குறைக்க பல கணினிகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து எந்த தகவலையும் இஸ்ரேல்வெளியிடவில்லை.

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு மின்சார கொள்முதல் இஸ்ரேலின் மக்களிடையே அதிகரித்துள்ள இந்த சமயத்தில் இது போன்ற ஒரு தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தன்னை கணினி பாதுகாப்பு மென்பொருட்களின் முன்னோடி என்றும் அதே போல சைபர் ஆயுதங்களை தயாரிப்பதிலும் அதிக முனைப்பு காட்டி வரும் தன்னிடமே இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதே போன்று 2013 ஏப்ரல் 7ஆம் தேதியிலும் opisrael என்ற இஸ்ரேலுக்கு எதிரான சைபர்தாக்குதலில் இஸ்ரேல் சற்று திணறிப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து ஸ்டக்ஸ்நெட் என்றொரு கம்பியுட்டர் வைரஸை செய்த இஸ்ரேல் அதனை வைத்து ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது. மேலும் தன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது நிரலாக்கத்தை (programming code) எந்த ஒரு மனித குறுக்கீடும் இல்லாமல் தானே  மாற்றியமைத்து இலக்கு கணினிகளை செயலிழக்க  செய்யும் ப்ராங்கன்ஸ்டைன் வைரஸை கண்டுபிடித்ததிலும் இஸ்ரேலிற்கு பெரும்பங்கு உண்டு.

Comments are closed.