இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹூ பிரசாரத்திற்கு நிதி உதவி செய்த சவூதி மன்னர் சல்மான்

0

மத்திய கிழக்கின் புற்றுநோயான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் தேர்தல் பிரசாரத்திற்கு சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிதியுதவிஅளித்த செய்தி சமீபத்தில் வெளியான பனாமா பேப்பர் மூலம் தெரியவந்துள்ளது.

சவூதி அரேபிய மன்னர்களின் இஸ்ரேல் உடனான தொடர்பு குறித்து அவ்வபோது கிசுகிசுக்கப்பட்டாலும் தற்போது வெளியான தகவல்கள் இருவருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டரை வருடங்களில் 16 பில்லியன் டாலர்களை வேறு அராபிய நாடுகள் மூலமாகவும் இஸ்ரேல் வளர்ச்சி நிதி மூலமாகவும் இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது சவூதி அரேபியா. தற்போது வெளியாகியுள்ள பனாமா பேப்பர்கள் மூலம் சவூதி மன்னர் சல்மான் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் தேர்தல் பிரச்சாரதிர்க்காக 80மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் 2015 இல் இந்த 80 மில்லியன் டாலர்களை முஹம்மத் ஈயாத் கயாளி என்பவர் மூலம் வழங்கியுள்ளார். இந்த பணம் டெட்டி சாகி என்ற இஸ்ரேலிய தொழிலதிபருக்கு சொந்தமான பிரிட்டிஷ் விர்ஜின் தீவிகளில் உள்ள ஒரு நிறுவனத்தின் கணக்கில் இடப்பட்டுள்ளது. அவர் இந்த பணத்தை நெதன்யாஹூவின் தேர்தல் நிதிக்காக அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான செய்திகள்
http://panamapapers.sueddeutsche.de/en/
https://panamapapers.icij.org/the_power_players/
http://bit.ly/1UJkMS4 http://www.freezepage.com/1462699031QTMVBVWSWT
http://www.talniri.co.il/marketnews/article.asp?mp=4&id=76320

ஆகிய தளங்களில் கிடைக்கப்பெறுகின்றன.

Comments are closed.