இஸ்ரேலிய போர் குற்றங்களை ஆவணப்படுத்துபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டம்

0

இஸ்ரேலிய போர் குற்றங்களை ஆவணப்படுத்துபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டம்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து ஃபலஸ்தீன மக்கள் சமீபத்தில் நடத்திய “The Great March Of Return”  என்றழைக்கப்பட பேரணியில், ஆயுதம் எதுவும் ஏந்தாத அப்பாவி ஃபலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலிய இராணுவத்தின் இந்த தாக்குதலில் 3000  த்துக்கும் அதிகமானோர் காயமடைந்தும் பலர் இஸ்ரேலிய இராணுவத்தால் கொலைசெய்யப்பட்டாலும்  இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது ஃபலஸ்தீனர்களை கொலை செய்யும் போது அதனை இஸ்ரேலிய இராணுவத்தினர் உற்சாகமாக கொண்டாடும் வீடியோ காட்சி வெளியான பின்பு தான்.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் அமைதி பேரணி நடத்தும் ஃபலஸ்தீனர்களின் ஒரு குழுவை தொலைவில் இருந்து இஸ்ரேலிய இராணுவ ஸ்னைப்பர்கள் குறிவைத்து சுடுவது பதிவாகியுள்ளது. இதில் ஒரு வீரன் ஃபலஸ்தீன குழுவில் உள்ள ஒரு சிறுவனை சுடுமாறு கூற அச்சிறுவன் எப்போதும் குனிந்தே செல்கிறான் என்றும் தன்னால் அவனை சுட முடியவில்லை என்கிறான் மற்றொருவன். இறுதியில் ஒரு ஃபலஸ்தீனியரை சுட்டதும் அவர்களுக்குள் உற்சாகமாக கொண்டாடுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ இஸ்ரேலிய இராணுவத்தின் கொடூரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இந்நிலையில் பணியில் உள்ள இஸ்ரேலிய படைகளை வீடியோ எடுபதற்கும் இஸ்ரேலிய இராணுவத்தினரின் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்வதற்கும் தடை வித்திக்கும் சட்ட முன்வரைவை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டோர் லிபர்மேனின் வலதுசாரி இஸ்ரேல் பிடினு அமைப்பு முன்மொழிந்துள்ளது.

இந்த சட்டத்தின் படி இஸ்ரேலிய இராணுவத்தினரை படம்பிடிப்பவர்களுக்கு ஓராண்டு முதல் பத்தாண்டு காலம் வரை சிறை தண்டனை வழங்கப்படும். இத்தகைய வீடியோக்கள் சர்வதேச அளவில் இஸ்ரேலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதினால் அவற்றை தடை செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் பிடினு கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply