இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்!

0

இஸ்ரேல் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் பிரதமரான பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் முன்னாள் ரணுவத் தலைவர் பென்னி காண்ட்சின் அமைத்த கூட்டணிகளுக்கிடையில் கடும் போட்டி இருந்தது. கருத்துக் கணிப்புக்களில் யாருக்கும் பெரும்பானமை கிடைக்காது என கூறப்பட்டிருந்தது.

ஆளும் கட்சியான லிகுட் கட்சிக்கு மொத்தமுள்ள 120 இடங்களில் 36 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. முன்னாள் ராணுவ தளபதி கட்சிக்கு 35 இடங்கள் கிடைத்தன. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அதை ஒட்டி வலது சாரிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.

நேதன்யாகுவின் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனதை ஒட்டி இஸ்ரேல் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம் இயற்றி உள்ளனர். இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. மீண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

Comments are closed.