இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த இந்தோனேசியா

0

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஃபலஸ்தீனின் ரமல்லா நகரில் இந்தோனேசியாவின் கவுரவ தூரகத்தை திறந்து வைக்க சென்ற இந்தோனேசிய வெளியுறவுத் துறை அமைச்சரை அங்கு செல்ல அனுமதி வழங்காமல் மறுத்தது இஸ்ரேல். இந்த நிகழ்வுக்கு தகுந்த பதிலடி ஒன்றை தற்போது இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது இந்தோனேசியா.

கடந்த புதன் கிழமை சிங்கப்பூரில் இருந்து சிட்னி நகருக்கு விமானம் மூலம் பயணித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு சென்ற விமானத்திற்கு தங்களது வான்வெளியில் பறக்க அனுமதி மறுத்துள்ளது இந்தோனேசியா. இந்தோனேசியா இந்த முடிவை எடுத்ததற்கு காரணம் இதே போன்று இஸ்ரேல் இந்தோனேசியாவிற்கு செய்ததினால தான் என்று இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு குறித்து இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அர்மனதா நசிர் கூறுகையில், “இந்த சம்பவம் சாதாரணமானது தான். இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

இந்தோனேசியாவிற்கும் இஸ்ரேலுக்கும் அரசியல் உறவுகள் எதுவும் கிடையாது. உலகில் அதிகம் முஸ்லிம்கள் வசிக்கும் நாடான இந்தோனேசியா ஃபலஸ்தீன விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நாடாகும்.

Comments are closed.