இஸ்ரேல் – பாலஸ்தீன காதல் கதை இஸ்ரேலிய பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்

0

இஸ்ரேலிய பெண் ஒருவருக்கும் பாலஸ்தீன ஆண் ஒருவருக்கும் இடையேயான காதல் கதையை மையாமாக கொண்ட நாவல் ஒன்றை இஸ்ரேலிய கல்வித்துறை அமைச்சகம் பள்ளிகளில் பயன்படுத்துவதை விட்டும் தடை செய்துள்ளது.

பார்டர் லைஃப் (Borderlife) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகம் டோரிட் ராபின்யன் என்பவரால் எழுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு சுயசரிதை போல அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் கதைகளம் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இஸ்ரேலிய பெண் மற்றும் பாலஸ்தீன ஆண் இருவருக்கும் இடையேயான காதலையும் அவர்கள் தத்தமது ஊர்களுக்கு சென்றபின் ஏற்படும் பிரிவையும் விளக்குகிறது.

இந்த கதை இஸ்ரேலிய மக்களை பாலஸ்தீனர்களுடன் நட்பு பாராட்ட வைத்துவிடும் என்கிற அச்சத்தில் இஸ்ரேலிய கல்வி அமைச்சகம் பள்ளி பாடதிட்டத்தில் இருந்து நீக்கியுள்ளது.

இந்த தடை விதிக்கப்பட்டதும் இந்த புத்தகத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை ஹங்கேரி, ஸ்பெயின் மற்றும் பிரேசில் ஆகிய நாட்டு மக்களுக்காக மொழிபெயர்க்கப்படும் வேலைகளும் விரைவாக நடந்து வருகின்றன.
இஸ்ரேலிய சந்தைகளிலும் இந்த புத்தகம் விறுவிறுப்பாக விர்த்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.