இஸ்ரேல்: மதுபான பாட்டிலில் மகாத்மா காந்தி புகைப்படம்!

0

இஸ்ரேல் நாட்டின் மக்க ப்ரூவரி என்ற நிறுவனம், மதுபான பாட்டிலில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அச்சடித்து விற்பனை செய்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களைவையிலும் பேசப்பட்டது. இதனையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை தொடர்புக்கொண்ட இந்திய அரசு, மதுபான பாட்டிலில் காந்தி புகைப்படத்தை அச்சடித்தன் காரணமாக அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் அந்த நிறுவனத்தின் மேலாளர், காந்தி படம் அச்சடிக்கப்பட்டதற்காக இந்தியர்களிடமும், இந்திய ‌அரசிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், மதுபாட்டிலில் இருந்து காந்தியின் படத்தை நீக்குவதாகவும் தெரிவித்தார்.

Comments are closed.