இஸ்லாத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்த எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டம்

0

பா.ஜ.க வை சார்ந்த எம்.பி. ஆனந்த் குமார் ஹெட்கே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி “இஸ்லாம் வெடிக்க காத்துக்கொண்டு இருக்கும் தீவிரவாத வெடிகுண்டு” என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை வன்மையாக கண்டித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உடுப்பியில் போராட்டம் நடத்தியது. “இவரைப் போன்ற தேச விரோத சக்திகள் நாட்டின் அமைதியை குலைக்க முயல்கின்றனர்” என்றும் “இது போன்ற பேச்சுக்களால் தேசத்தை நிலைகுலையச் செய்யும் சக்திகளை நாட்டில் வாழ அனுமதிக்க கூடாது” என்றும் “இவர்களை நாட்டை விட்டே துரத்த வேண்டும்” என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஆனந்த் குமார் ஹெட்கே அவரது அந்த பேச்சை கண்டித்து கர்நாடக ஆளுநர் மற்றும் இந்திய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுமாறும் வலியுறுத்தினர்.

மேலும் “இவரை போன்ற தேச விரோத சக்திகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இது போன்ற செயல்களுக்கு எதிராக போராடி சிறுபான்மையினரை காக்கும். சிறுபான்மையினர் மிகவும் பலகீனமாகா உள்ளனர்” என்றும் கூறினர்.

Comments are closed.