இஸ்லாத்தை ஏற்றதற்காக வாலிபர் மீது இந்துத்துவா வெறியர்கள் தாக்குதல்

0

மங்களூரில் உள்ள தக்சின கன்னடா மாவட்டத்தின் சுள்ளியா பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ஆச்சார்யா. இவர் ஒரு வருடம் முன்பு கேரளாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போது இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் தனது பெயரை முஹம்மத் முஸ்தகீம் என்றும் மாற்றியுள்ளார்.

இதனை அறிந்த அப் பகுதியின் சில இந்துத்துவா தலைவர்கள் அவரை இந்து மதத்திற்கு மாறுமாறு மிரட்டயுள்ளனர். மேலும் அவர் மதம் மாறியதை விசாரிக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை அப்பகுதியின் அரசியல் தலைவர் ஒருவர் முஸ்தகீமை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை காண விரும்பாத முஸ்தகீம் தன வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

இதில் ஆத்திரமுற்ற இந்துத்துவாவினர் அவரை துரத்திச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். போலீசாரின் தலையீட்டின் பேரில் முஸ்தகீம் அவர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டு சுள்ளியாவில் உள்ள KVG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

Comments are closed.