இஸ்லாத்தை ஏற்றதற்காக கொலை செய்யப்பட்ட ஃபைசலின் முழு குடும்பமும் தற்போது இஸ்லாத்தை தழுவியது

0

கேரள மாநிலம் திருரங்காடியைச் சேர்ந்த அனில்குமார் என்ற இளைஞர் இஸ்லாத்தை ஏற்றார் என்ற காரணத்திற்காக ஆர்எஸ்எஸ் குண்டர்களால் 2016 நவம்பர் மாதம் 19 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். (பார்க்க செய்தி)

இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது குடும்பத்தில் உள்ள பலரும் இஸ்லாத்தை ஏற்க தொடங்கினர். தற்போது இறுதியாக அணில் குமார் என்ற ஃபைசலின் தந்தையும் அவரது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுள்ளார். இவர் தான் ஃபைசலின் குடும்பத்தில் இஸ்லாத்தை ஏற்ற கடைசி நபராவார்.

சங்க்பரிவார குண்டர்கள் ஃபைசலை கொலை செய்ததும் அவரது தாயார் தங்கள் குடும்பம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்கும் என்று வெளிப்படையாக சபதமேற்றிருந்தார். இதனையடுத்து இரண்டு மாதத்திற்கு முன்னர் ஃபைசலின் இரு சகோதரிகளும் ஒரு மைத்துனரும் அவர்களின் ஐந்து குழந்தைகளும் இஸ்லாத்தை தழுவினர்.

தற்போது ஃபைசலின் தந்தை கிருஷ்ணன் நாயர் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கேரளா மாநிலம் பொன்னானி மாவட்டத்தில் உள்ள மெளனதுல் இஸ்லாம் சபா வில் வைத்து இஸ்லாத்தை ஏற்றுள்ளார். இதனையடுத்து மலப்புரத்தில் உள்ள மார்கஸுல்ஹித்யா வில் இஸ்லாம் குறித்து அவர் கற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபைசலின் குடும்பத்தில் அவரது கொலைவழக்கில் ஒரு குற்றவாளியான ஃபைசலின் மைத்துனர் வினோத் என்பவரை தவிர மற்ற அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஃபைசலை உயிர் தியாகியாக கருதும் இஸ்லாமிய சமூகம் அவரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரப்போவதாக தெரிவித்துள்ளனர்.

ஃபைசல் குறித்த செய்திகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

Comments are closed.