இஸ்லாமியர்களின் வாக்கு குறித்து மேனகா காந்தி சர்ச்சை கருத்து!

0

முஸ்லீம் வாக்குகள் குறித்து சர்ச்சையாக பேசிய மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக மேனகா காந்தி போட்டியிடுகிறார். அப்போது பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, நான் உறுதியாக இந்தத் தொகுதியில் வெற்றி பெற போகிறேன். இந்த வெற்றியில் இஸ்லாமியர்களின் பங்கு இல்லாவிட்டால் அது நன்றாக இருக்காது. அத்துடன் இங்குள்ள இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களிக்காமல், வெற்றிக்குப் பின் என்னிடம் வேலை கேட்டுவந்தால் அவர்களுக்கு நான் ஏன் உதவி செய்யவேண்டும். அதனால் எனக்கு வாக்களித்தால்தான் அவர்களுக்கு உதவி செய்வேன் என்று கூறினார்.

இந்த சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கேட்டு, மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Comments are closed.