இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம்: இலங்கை தாக்குதலுக்கு அரசாங்கமே காரணம்- அதிபர்

0

இலங்கையில் ஏற்பட்ட கொடூரத் தாக்குதல் குறித்து, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறுகையில், இந்நாட்டின் அரசு பாதுகாப்பு பணிகளை திறம்பட செய்ய மறந்துவிட்டது. இந்த வெடிகுண்டு நிகழ்வுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு என்று கூறிய அவர், புலனாய்வுத் துறை தலைவர் மற்றும் காவல்துறை தலைவர் தங்களின் பொறுப்புகளை உரிய முறையில் செய்யாமல் விட்டதால் தான் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டதாக கூறினார். அவர்கள் இருவரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்கவேண்டும் என கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன இலங்கை மக்கள், இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக பார்க்கவேண்டாம் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Comments are closed.