இஸ்லாமியர்களை மாட்டுடன் ஒப்பிட்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ!

0

அசாம் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பிரசாந்த பூகன் இஸ்லாமிய மக்களை மாட்டுடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் அசாமில் நடைப்பெற்ற பாஜக தேர்தல் பிரச்சரத்தில் எம்.எல். ஏ பிரசாந்த பூகன் பேசிய அவர், ”முஸ்லீம் மக்கள் பசு மாடு போன்றவர்கள். ஆனால் பால் தராத பசுமாடுகள்” என்று கூறினார்.

பிரசாந்த் பூகனின் இந்த பேச்சுக்கு பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுக் குறித்து விளக்கமளித்த எம்.எல்.ஏ பிரசாந்த் பூகன், “என்னுடைய கருத்து தவறாக பரபரப்பட்டுள்ளது. நான் கூற வந்தது 90 சதவீத முஸ்லீம்கள் பாஜக-வுக்கு ஓட்டு போடவில்லை. அப்படி இருக்கையில் பால் தராத மாட்டிற்கு ஏன் தீவனம் வைக்க வேண்டும்” என்ற முறையில் தான் நான் அந்த கருத்தை கூறினேன்.

நான் பலவகையை முன்னிறுத்தி தான் இப்படி கூறினேன். முஸ்லீம்களை மாடுகள் என்று கூறவில்லை. என்னுடைய கருத்து தவறாக பார்க்கப்பட்டு வருகிறது. என தெரிவித்தார்.

பாஜக எம்.எல்.ஏ-வின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் வேட்பாளர் சய்கியா எழுதியிருக்கும் கடிதத்தில் “பாஜக எம்.எல்.ஏ பிரசாந்த் பூகன் இஸ்லாமிய மக்களை மாட்டுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் பாஜகவிற்கு ஓட்டு போடவில்லை. இதை ஏற்றுக் கொள்ள முடியாத அவர்கள் இஸ்லாமிய மக்கள் மீது தங்களது வெறுப்பை பதிவு செய்து வருகின்றன.

ஓட்டு போடாத காரணத்தால், பால் தாராத மாட்டிற்கு ஏன் தீவனம் வைக்க வேண்டும் என்று கேவலான கருத்தை பதிவு செய்துள்ளனர். பாஜக அரசு இஸ்லாமிய சமூகத்தினருக்காக எந்தவித நலத்திட்டங்களை செய்யவில்லை அதனால் அவர்கள் தேர்தலில் பாஜக அரசை புறம் தள்ளியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.