இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு கடும் எதிர்ப்பு

0

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இஸ்லாமியர்கள் அதிகம் தொடர்பு படுத்தப்படும் இந்நாட்களில் இஸ்லாமியர்கள்பெரும்பான்மையாக இருக்கும் நாடிகளில் ஐ.ஏஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு கடும் எதிர்ப்பு இருக்கிறது என்று ஆய்வு ஒன்றுதெரிவித்திருக்கிறது.

லெபனானில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு 99% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமீபத்தில் லெபனானின் பெய்ரூட்டில்ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய குண்டு வெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாலஸ்தீனின் காசா பகுதியில் 92% மக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேற்கு கரையில் 79%மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அராபிய பிரிட்டிஷ் புரிந்துணர்வு கவுன்சிலின் இயக்குநர் கிரிஸ் டோயல் இது குறித்து கூறுகையில் “இந்த ஆய்வு முடிவுஒன்றும் ஆச்சர்யம் ஏற்படுத்துவது அல்ல. இந்த மக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்அராபிய தேசத்தின் ஆபத்தாகவே காண்கிறார்கள்.யென்றால் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தால் பாதிக்கப்படுகிறவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களே” என்று அவர்கூறியுள்ளார்.
மேலும் “ஐ.எஸ்.ஐ.எஸ் இன் கொடூரத்தன்மை, பெண்களை அவர்கள் நடத்தும் விதம், போன்ற செயல்கள் மக்களிடம்அவர்கள் மேல் வெறுப்பை விதித்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இவர்களின் இத்தகையை செயல்கள் இஸ்லாமியர்அல்லாதோரை இஸ்லாமியர்களுக்கு எதிர்ராக திருப்புவதாக அவர்கள் நம்புகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் 91% மக்கள் இந்தத் தீவிரவாத இயக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பிரான்சு, ரஷ்சியா, லெபனான்,எகிப்து, துனீசியா, ஈராக் அம்ற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய தீவிரவாத செயல்களுக்கு முன்னாள்எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய தேசம் அமைக்கப் போராடுகிறோம் என்று கூறும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரால் அதிகம்பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள் தான். இன்றுவரை இஸ்லாமியர்களின் பெரும் எதிரியாகத் திகழும் இஸ்ரேலைஎதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாத இயக்கம் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.