“இஸ்லாமியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வீடியோ போடுவது பாஜக ஆட்சியில் ட்ரெண்ட்: கன்னையா குமார்

0

பாஜக ஆட்சியில், சிறுபான்மையினர் மீதும், தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தி வீடியோ எடுத்து பதிவிடுவது ட்ரெண்டாகி உள்ளதாக கன்னையா குமார் தெரிவித்துள்ளார்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் இந்துத்துவ பயங்கரவாதிகள் இஸ்லாமியர்கள் மீது வெறிச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு நாட்க்ளுக்கு மத்திய பிரதேசத்தில், மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண் மீது இந்து அமைப்பைச் சேர்ந்த பசு குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

சிறுபான்மையினர் மீதும், தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தி வீடியோ எடுத்து பதிவிடுவது 5 வருடங்களாகவே பாஜக ஆட்சியில் நடைபெற்று வருகிறது. குற்ற செயல்களில் ஈடுபடுவோர் தண்டனை குறித்து அஞ்சுவது இல்லை. ஏனெனில், ஆட்சியில் இருப்பவர்கள் இவர்களது கருத்தியலை ஆதரிக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

Comments are closed.