ஈராக் ஃபலூஜாவில் இருந்து 24 மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

0

ஈராக் பாதுகாப்பு படைகள் ஐ.எஸ். இயகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஃபலுஜா நகரை மீட்க தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதனால் கடந்த 24 மணி நேரங்களில் ஃபலுஜா நகரில் வசிக்கும் ஏறத்தாள 2300 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன என்று சர்வதேச உதவிக்குழு ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ஃபலுஜாவின் முக்கிய மருத்துவமனையை ஈராக் பாதுகாப்பு படைகள் கைப்பற்றின. இன்னும் இந்த நகரத்தின் 20% பகுதிகள் ஐ.எஸ். இயக்கத்தினரின் வசம் தான் இருக்கின்றது.

பாக்தாதுக்கு மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மனிதநேய உதவிக்குழுக்கள் புதிதாக தங்கள் வீடுகளை விட்டு வெறியேறி வரும் மக்களின் வருகையை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருவதாக கூறியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரங்களில் மட்டும் 2300 குடும்பங்கள் ஃபலுஜாவை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர்கள் செல்லும் அமாரியத் அல் ஃபலுஜா, ஹப்பானியா தூரித் நகரம் மற்றும் கால்தியா ஆகிய பகுதிகளில் அவர்களுக்கு மிகக் குறைவான இடங்களே இருக்கின்றன என்று நார்வே நாட்டு உதவிக்குழு தெரிவித்துள்ளது.

ஐநா அகதிகள் மையத்தின் கணக்குப் படி கடந்த இரண்டு நாட்களில் 20000 அகதிகள் ஃபளுஜாவை விட்டு வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளது. ஃபளுஜாவை விட்டு வெளியேறுபவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் இருந்து பிரச்சனைகள் தொடங்குகின்றன. ஒருவருக்கு குறைந்த பட்சம் மூன்று லிட்டர் குடிநீர் ஒரு நாளைக்கு தேவை என்றும் அதனை எவ்வாறு தங்களால் கொடுக்க இயலும் என்று தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஐநா மற்றும் ஈராக்கிய அரசு அன்பார் மாகாணத்தில் 60000 பேருக்கு முகாம்களை அமைத்துள்ளனர். ஆனால் அங்கு இனி புதிதாக வருபர்களுக்கு இடம் இல்லை என்று கூறியுள்ளார்.
ஃபளுஜாவை விட்டு வெளியேறி வருபவர்கள் உணவு மற்றும் அடிப்படை வசதி இன்றி இருந்த தங்களின் கொடுமையான கதைகளை கூறி வருகின்றனர். நாங்கள் எங்களால் இயன்ற வரை உதவிகளை புரிந்து வருகின்றோம். தற்பொழுது இதற்கு தான் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் அதனை இப்போதே கொடுக்கப் பட வேண்டும் என்று முகாம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுவரை 70000 பேர் ஃபலுஜாவை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இனி வரும் நாட்களில் இன்னும் 60000 பேர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஏறத்தாள 150,000 மக்களுக்கு மனித நேய உதவிகள் தேவைப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Comments are closed.