ஈராக்: மந்திர சக்தி தேவையில்லை!

0

ஈராக்: மந்திர சக்தி தேவையில்லை!

இது கோடை காலமும் அல்ல. மின்சார தட்டுப்பாடும் பெரியளவில் இல்லை. முன்பை விட மின்சார உற்பத்தி அதிகரித்தே இருக்கிறது. எண்ணெய் வியாபாரம் மூலம் அரசாங்க கருவூலமும் நிறைந்துள்ளது. அப்படி இருந்தும் மக்கள் எதற்காக போராடுகிறார்கள்? அக்டோபர் 1 அன்று ஈராக் வீதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட செய்தியை கேட்ட அதிகார வர்க்கத்தினர் இவ்வாறுதான் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர். மின்சார தட்டுப்பாடு காரணமாக மக்கள் பொதுவாக கோடை காலத்தில்தான் போராட்டம் நடத்துவார்கள் என்பதால் இப்போது போராட்டத்தை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை.

சென்ற வருடம் பஸ்ரா நகரில் இருந்த மின்சார தட்டுப்பாடும் சுத்தமில்லாத குடிநீரும் மக்களை போராடத் தூண்டியது. ஜூலை மாதம் பஸ்ரா, நஜஃப் மற்றும் கர்பலா நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. அசுத்தமான குடிநீரை பருகியதன் காரணமாக முப்பதாயிரம் மக்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. பிரதமர் ஹைதர் அல் அபாதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்தனர். அக்டோபர் 2018இல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.