ஈரான் பாராளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல்: 12 பேர் பலி

0

ஈரான் பாராளுமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வெடிகுண்டு துப்பாகிகளுடன் பெண்கள் போன்று வேடமிட்டு வந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

12 பேரை கொன்று 42 க்கும் மேற்பட்டோரை காயமடையச் செய்த 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஈரான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள வேலையில் இதன் பின்னணியில் சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் மீதான ஐ.எஸ் அமைப்பினரின் முதல் தாக்குதல் இது என்பது குறிப்படத்தக்கது.

மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்ததில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கிடே இறுக்கமான சூழ்நிலை நிலவி வருகிறது. முன்னதாக கத்தார் நாட்டுடனான தங்களது ராஜாங்க உறவை கத்தார் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி ஐந்து அரபு நாடுகள் முறித்தன. ஆயினும் இந்த நாடுகள் தங்களின் கூற்றிற்கு ஆதாராம் என்று எவற்றையும் வெளியிடவில்லை. தற்போது ஈரானில் நடைபெற்றுள்ள இந்த தாக்குதலின் பின்னியில் சவூதி அரேபியா இருக்கிறது என்ற ஈரானின் குற்றச்சாட்டில் இருந்து இந்த பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஈரானில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவும் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

காலை 10:30 மணியளவில் துப்பாக்கி மற்றும் தற்கொலை உடுப்புகளுடன் பாரளுமன்ற வளாகம் சென்ற தீவிரவாதிகள் அங்குள்ள பாதுகாவலரை கொன்று பிற மக்களை சிறை பிடித்துள்ளனர். இந்த கட்டடத்தில் புத்துப்பித்தல் பணிகள் நடந்து கொண்டிருபப்தாகவும் அதனால் பாதுகாப்பு சற்று குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறி டெஹ்ரான் வீதியில் தன் துப்பாக்கியால் சுட்டவாறு ஓடி மீண்டும் பாராளுமன்ற வளாகத்திற்குள் சென்றுள்ளான். மற்றோவன் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளான்.

பாராளுமன்ற தாக்குதல் போலவே ஆயதுல்லா கொமைனியின் சமாதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்கு தாக்குதல் நடத்திய இரண்டு தீவிரவாதிகள்ஈரான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.a

Comments are closed.