ஈரோடு: கோகோ கோலா ஆலைக்கு வழங்கப்பட்ட நிலம் ரத்து

0

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கோகோ கோலா நிறுவன ஆலை அமைப்பதற்கு தமிழக அரசு 71.3 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. அந்த இடத்தில் கோகோ கோலா தொழிற்சாலை அமைக்கப்பட்டால் அந்நிறுவனம் அதிக அளவில் நிலத்தடி நீரை எடுக்கும் என்றும் இதனால் அப்பகுதியில் வறட்சி ஏற்படும் என்றும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
கோகோ கோலா நிறுவனம் அமைப்பதற்கு விவசாயிகள் சங்கங்கள், அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் என பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். தாங்கள் நிலத்தடி நீரை பயன்படுத்தப் போவதில்லை என்றும் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்த பின்னரே வெளியேற்றுவோம் என்றும் நிறுவனம் கூறியதை இவர்கள் ஏற்க மறுத்தனர்.
இதனிடையே நேற்றைய தினம், நிலம் ஒதுக்கிய பிறகும் இதுவரை பணிகளை தொடங்காததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று, தொழிற்சாலை அமைப்பதற்காக வழங்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

Comments are closed.