உங்களை உளவு பார்க்கும் ஃபேஸ்புக், கூகிள்.

0

தங்கள் பயனாளர்களின் உரையாடல்களை ஃபேஸ்புக் எந்நேரமும் கவனித்துக்கொண்டு இருகின்றது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வடக்கு பிளோரிடா பல்கலைகழக பேராசிரியர் கெல்லி பர்ன்ஸ் என்பவர் சீதா ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

நம் அலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்படும் ஒவ்வொரு செயலியும் தங்கள் பயன்களுக்கு ஏற்ப அனுமதிகளை பெற்றுக்கொள்ளும். அப்படி ஃபேஸ்புக் நம் அலைபேசியில் பெரும் ஒரு அனுமதி Record Audio என்ற அனுமதி. இந்த அனுமதி மூலம் பேஸ்புக் தங்கள் பயனாளர்களின் உரையாடல்கள் அனைத்தையும் கவனிகின்றது என்று பேராசிரியர் பர்ன்ஸ் தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார்.

இன்னும் வாடிக்கையாளர்களின் உரையாடலுக்கு ஏற்ப ஃபேஸ்புக் தனது விளம்பரங்களை அவர்களுக்கு காட்டுகிறது என்றும் அவர் கண்டறிந்துள்ளார். இதனை சோதனை செய்ய பர்ன்ஸ் தனது அலைபேசியை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட சில பொருட்கள் குறித்து உரையாடலை நிகழ்த்தியுள்ளார். பின்னர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அவரது உரையாடலுக்கு தொடர்புடைய விளம்பரங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன.

தங்கள் பயனாளர்களின் உரையாடலை கவனிகின்றோம் என்று ஒப்புக்கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், ஆனால் தாங்கள் அதனை விம்பரதிர்காக பயன் படுத்துவதில்லை என்று கூறியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் ஃபேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்சம் தற்பொழுது அமெரிக்காவில் மட்டும் செயலில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்க உங்கள் ஃபேஸ்புக் செயலியின் Record Audio அனுமதியை திரும்பப்பெற்று விடுங்கள். அதன் மூலம் உங்கள் அலைபேசியின் மைக- ஐ ஃபேஸ்புக் செயலி பயன்படுத்த இயலாமல் போகும்.

இதே போன்று கூகிள் நிறுவனமும் தங்கள் பயனார்களின் உரையாடல்களை கவனிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூகிளின் வாய்ஸ் சர்ச் அம்சத்தை பயன்படுத்துபவர்களின் உரையாடல்களை கூகிள் கவனித்து வருகிறது. இதனை கூகிள் தனது மொழி கண்டறிதல் ஆற்றலுக்கு பயன்படுத்திவருவாதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிறிய ஆறுதல் என்னவெனில் கூகிள் பதிந்து வைத்திருக்கும் நம்மைக்குறித்த இந்த தகவல்களை அழித்துவிடலாம் என்பது தான்.

இதற்கு https://history.google.com/history/audio என்ற பக்கத்திற்கு சென்று நீங்கள் அழித்துவிடலாம். இது கடந்த 2015 ஜூன் மாதம் முதல் செயலில் இருப்பதாக கூறப்படுகிறது. தங்களை பற்றிய ரகசியங்களை நபர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளாதவர்கள் கூகிள் ஃபேஸ்புக்கிடம் தங்களை அறியாமலேயே பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

Comments are closed.