உங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்

0

டெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அபே வர்மா உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

இவர்களில், சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கூறியதுடன், முஸ்லிம்களைத் தானே களத்தில் இறங்கி விரட்டியடிப்பேன் என்று பகிரங்க மிரட்டல் விடுத்தவர் கபில் மிஸ்ரா. அதன் விளைவுதான் டெல்லி அரங்கேறியது.

இந்நிலையில், கபில் மிஸ்ரா படித்துப்பட்டம் பெற்ற, டெல்லி சமூகப்பணி கல்லூரி (Delhi School ofSocial work) என்ற நிறுவனத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தினர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “டெல்லி சமூகப்பணி கல்லூரி மாணவர்கள், 1947 பிரிவினையின்போதும், 1984இல் சீக்கியருக்கு எதிரான வன்முறையின்போதும், மக்கள் ஒற்றுமைக்காக பங்காற்றியவர்கள். 1946 முதல் இறுவரை ஏராளமான சமூகப்பணியாளர்களையும், கல்வியாளர்களையும் இக்கல்லூரி உருவாக்கியுள்ளது.

ஆனால் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா போன்ற மாணவர்களும் இதே கல்லூரியில் பயின்றுள்ளனர் என்பது வேதனை. கபில் மிஸ்ரா உரையால் கடந்த 3 நாட்களாக டெல்லியில் வகுப்புவாத வன்முறை ஏற்பட்டு, பலர் கொல்லப்படனர். பலர் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.

இதனால் கபில் மிஸ்ரா இந்தக்கல்லூரியில் படித்தவர் என தெரிவிக்க வெட்கப்படுகிறோம். கபில் மிஸ்ராவின் செயலால், எங்கள் கல்லூரியின் நற்பெயர், சமூகப்பணிகள் பாழாகி உள்ளன. டெல்லி காவல்துறை கபில் மிஸ்ராவை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர்கள் கூறியுள்ளன.

Comments are closed.