உத்தராகண்ட்: முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு ஜும்மா தொழுகை நடத்த சிறப்பு அனுமதி

0

உத்தராகண்ட் மாநிலத்தில் அரசு பணியில் இருக்கும் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையில் பங்கேற்பதற்காக சிறப்பு அனுமதியாக 90 நிமிட இடைவேளை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் ஹரிஷ் ரவாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு அவர்கள் ஜும்மா தொழுகையில் கலந்துகொள்ள வசதியாக வெள்ளிக்கிழமை மதிய இடைவெளியை 12:30 மணியில் இருந்து 2:00 மணி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் இது தவிர மெட்ரோ ரயில் தொடர்பாகவும், தங்களது 5 வருட ஒப்பந்தத்தை முறிக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எகுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.