உத்தர பிரதேச பஞ்சாயத்து தேர்தலில் ஆளும் சமாஜ்வாதிகட்சி மாபெரும் வெற்றி

0

உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில்  74 இடங்களில் 60 இடங்களில் ஆளும் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் 36 இடங்களில் இக்கட்சி போட்டியின்றி வெற்றியை பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

வாரணாசி தொகுதியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க மிகப்பெரிய அவமானத்தை சந்தித்துள்ளது. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பா.ஜ.க. மற்றும் அப்னா தளத்தின் கூட்டணி வேட்பாளர் அமித் குமார் சோன்கரை   சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அபரஜிதா சோன்கர் தோற்கடித்துள்ளார்.

இதே போல காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணா சவ்ராசியா போட்டியில் இருந்து பின்வாங்க சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளார்.

பா.ஜ.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் முஸஃபர்நகர், ஷாம்லி உட்பட ஐந்து இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்.

Comments are closed.