உத்தவ் தாக்கரே தனது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்: பாஜக

0

மகாராஷ்டிராவில் முனிசிபல் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் இந்த வேலையில் பாஜக, சிவ சேனா தலைவரான உத்தவ் தாக்கரே மீது ஊழல் புகார் சுமத்தி அவர் தனது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது. கடந்த புதன் கிழமை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஊழல் கரை பதிந்தவர் என்று குற்றம் சாட்டியுள்ளார், மேலும் அவர் தனது சொத்து விபரங்களை வெளியிட தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நான் அரசியலில் 25 வருடங்களாக இருந்து வருகிறேன். ஆனால் என்னுடைய சொத்து அதிகரிக்கவில்லை. கண்ணாடி வீடுகளில் இருப்பவர்கள் உள்ளிருந்து பிறர் மீது கல் எரியக் கூடாது.” என்று அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்துக்களை தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கூறியுள்ளார். தனது நிலை இப்படி இருக்க தாக்கரேயின் நிலையோ காலம் செல்லச்செல்ல அவர் பணக்காரர் ஆகிக்கொண்டே செல்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் சிவ சேனா தங்களது தொண்டர்களுக்கு எதிராகவே பணியாற்றுகின்றது என்று கூறியுள்ளார். முன்னதாக பாஜக எம்.பி.கிரித் சோமையா தாக்கரேவிடம் அவரது சொத்து விபரங்களை வெளியிடுமாறு கூறியிருந்தார். மேலும் சிவ சேனாவின் பத்திரிகையான சாம்னா வை தேர்தல் தினத்தன்று வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி தேர்தல் கமிஷனிடம் பாஜக கோரிக்கை வைத்துள்ளது.  நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போதே சாம்னாவின் ஔரங்காபாத் பகுதி வெளியீட்டில் விளம்பரங்கள் அச்சிடப்பட்டுள்ளது என்று பாஜக வின் தலைவர் ஸ்வேதா ஷாலினி கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தாக்கரே, “இது போன்ற நிர்பந்தங்கள் அவசரக்காலதிற்கு நிகரானவை என்றும் அவர்கள் சாம்னாவை தடை சிய நினைத்தால் முதல்வர் மற்றும் பிதரமரின் வாயையும் அடைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் இந்த தேர்தலின் முடிவு வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகும்.

Comments are closed.