உத்திர பிரதேசத்தில் தொழுகை நடத்தியவர்கள் மீது வெறுப்பை தூண்டியதாக வழக்கு

0

உத்திர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர் அஹ்மத் அலி. இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் ரமலான் மாதம் கூட்டு பிரத்தனையில் ஈடுபடுவதற்கு அப்பகுதியில் வாழும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவர் மீதும் இவரது குடும்பத்தினரான ரெஹ்மத் அலி, தாஹிபா, ஜரீனா, மற்றும் ஷாஜஹான் ஆகியோர் மீது அப்பகுதி காவல்துறையினர், இரு குழுக்களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக நடந்து கொண்டதாக கூறி IPC 153A பிரிவில் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.

காவல்துறையின் கூற்றுப்படி கடந்த இரண்டு வாரங்களாகவே இந்த பகுதியில் அலிக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் தொழுகை நடத்தப்படுவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும், சம்பந்தப்பட்ட அந்த கட்டிடம் பள்ளிவாசல் என்று அரசுப் பதிவேட்டில் இல்லாத காரணத்தினால் அஹமத் அலியின் குடும்பத்தினர் தவிர அங்கு தொழுகை நடத்த வேறெவருக்கும் அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டும் தற்போது முதல் தகவல் அறிக்கையில் குரிப்பிடப்பட்டுள்ள ஐந்து நபர்கள், தங்களை அப்பகுதி இந்துக்களில் சிலர் தொந்தரவு செய்வதாக போலியான புகார் கொடுத்ததாகவும் இவர்களின் இந்த புகாரின் காரணமாக அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்று ஹஸன்பூர் பகுதி காவல் நிலைய அதிகாரி அவினாஷ் குமார் கவ்தம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ரெஹ்மத் அலியின் உறவினர் ஷபிர் அலி கருத்து தெரிவிக்கையில், “கடந்த நாங்கு வருடங்களாக இந்த இடத்தில் நாங்கள் தொழுகை நடத்தி வருகிறோம். அப்பகுதியில் வாழும் பிற மத சமூக மக்களிடையே ஏற்பட்ட நல்லிணக்கம் மூலமாக அங்கு ஒரு பள்ளிவாசலும் கட்டப்பட்டது. தற்போது இந்த பிரச்னையை யாரோ கிளப்பி விட்டுள்ளனர். இப்போது இங்கு தொழுகை நடத்துவதை நாங்கள் நிறுத்திவிட்டோம்.” என்று கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் மிஸ்ரா, காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் அஹமத் அலியிடம் அவரது குடும்பத்தினர் தவிர வேறெவரும் இங்கு தொழுகை நடத்த வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொண்டுள்ளது என்றும் பிரச்சனை ஏற்படுத்த முனைந்த கிராம மக்களில் சிலர் அடக்கப் பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.