உத்திர பிரதேசத்தில் ISI உளவாளியாக சந்தேகிக்கப்பட்ட ரமேஷ் கன்யால் என்பவர் கைது

0

உத்திர பிரதேசத்தில் ISI உளவாளியாக சந்தேகிக்கப்பட்ட ரமேஷ் கன்யால் என்பவர் கைது

இந்திய இராணுவ உளவுப்பிரிவும் உத்திர பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவும் இணைந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக ரமேஷ் கன்யால் என்கிற நபரை கைது செய்துள்ளது. இது குறித்த செய்தியை உத்தராகண்ட் சட்டம் ஒழுங்கு ADG அசோக் குமார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். ரமேஷ் கன்யாலின் கைது, பாகிஸ்தானிற்கு உளவு பார்த்ததாக இந்தியா தூதரக அதிகாரி மாதுரி குப்தா தண்டிக்கப்பட்ட சில வாரங்களில் நடைபெற்றுள்ளது.(பார்க்கசெய்தி)

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் கன்யாலின் சகோதரர் இந்தியா இராணுவத்தில் பணிபுரிபவர். சில வருடங்களுக்கு முன்னதாக கன்யாலின் சகோதரர் இராணுவ பிரிகேடியர் ஒருவரது வீட்டில் கன்யால் பணி புரிய உதவியுள்ளார். அந்த பிரிகேடியருக்கு சில காலம் கழித்து பாக்கிஸ்தானில் பணியிடமாற்றம் வழங்கப்பட்டது. அப்போது இரண்டு வருடங்கள் பாக்கிஸ்தானில் இருந்த கன்யால் பாகிஸ்தான் உளவுத்துறைக்காக உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவர் மீது கடந்த 20 ஆம் தேதி உத்திர பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது. கன்யாலை தொடர்ச்சியாக கண்காணித்து வந்த உளவுத்துறை அவரை 23 ஆம் தேதி அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளது.

Comments are closed.