உத்திர பிரதேசம்: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய மோடி?

0

உத்திர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஃபதேஹ்பூரில் நரேந்திர மோடி மக்களிடம் மதங்களின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மக்கள் மத்தில் உரையாற்றிய மோடி, எந்த ஒரு அரசும் மக்களை மதங்கள் மற்றும் சாதியின் அடிப்படையில் பிளவு படுத்த கூடாது என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ரமதானில் மின்சாரம் இருந்தால் தீபாவளிக்கும் இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு பாகுபாடும் இருக்கக் கூடாது.” என்று அவர் கூறியுள்ளார். மேலும் கபரஸ்தான் என்ற ஒரு இருந்தால் சுடுகாடும் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக மக்கள் மத்தியில் மத ரீதியாக பிளவு படுத்தும் செயல் என்று பலரும் விமர்சித்துள்ளனர். மோடியின் தற்போதைய தேர்தல் பிரச்சார அணுகுமுறையை விமர்சித்த பலர் மோடி புல்லட் ரயில்களில் இருந்து தான் பதவி ஏற்ற மூன்றே ஆண்டுகளில் கபரஸ்தானிற்கு வந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

மேலும் சிலரோ ரமதான் மற்றும் தீபாவளி நேரங்களில் உத்திர பிரதேசத்தின் மின்சார பயன்பாட்டு தகவல்களை பகிர்ந்துள்ளனர். அதில் கடந்த ரமழானில் 13500 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்றும் கடந்த தீபாவளி தினங்களான 28 அக்டோபர் முதல் நவம்பர் ஒன்று வரை நாள் ஒன்றிற்கு 15400 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் மோடி தன் பேச்சின் மூலம் மக்கள் மத்தில் ரமதான் தீபாவளி பண்டிகைகளை ஒப்பிட்டு பிரிவினையை ஏற்ப்படுத்த முயன்றுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

நடப்பு இப்படி இருக்க மோடிக்கு இத்தகைய தகவல்களை கொடுத்தது யார் என்றும் அது மத்திய அமைச்சர் பியுஷ் கோஷலா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னதாக இவர் லக்னோவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய போது உத்திர பிரதேச அரசு இந்துக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் பாராபட்சம் காட்டுகின்றது என்று கூறியிருந்தார்.

மோடியின் இந்த பேச்சை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தேர்தல் கமிஷனிடம் இது தொடர்பாக புகாரளிக்க அணுகும் என்று தெரிய வந்துள்ளது. மக்களை பிளவு படுத்தும் பேச்சுக்கள் குறித்து தேத்தல் ஆணையம் அக்கறை கொள்ளுமானால் அதனை ஒரு பிரதமர் மீறுவது இதுவே முதன் முறையாகும் என்று கூறியுள்ளது.

Comments are closed.