உத்திர பிரதேசம்: மோடி பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிநாள்

0

உத்திர பிரதேச மாநிலத்தில் யோகி அதித்யநாத் தலைமையிலான அரசு பதவி ஏற்றதும் பல சர்ச்சைக்குரிய முடிவுகளை அம்மாநில அரசு எடுத்து வந்தது. பள்ளி மாணவர்கள் அதித்யனாத்தை போன்று சிகை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்பது தொடங்கி அதன் பல கொள்கை முடிவுகள் சர்ச்சைகளையும் கடும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தி வந்தது,

தற்போது மோடியின் பிறந்தநாள் வர இருப்பதை ஒட்டி ஞாயிற்றுக்கிழமையும் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1.60 லட்சம் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிகளுக்கு வருகை தந்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அனுபமா ஜெஸ்வால், மோடியின் பிறந்தநாளை ஒட்டி தூய்மை இந்தயா திட்டம் உட்பட பல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கென குறிப்பிட்ட பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் அங்கு சென்று விழாக்களில் பங்கெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விழாவின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த முடிவு பலதரப்பட்ட எத்ர்ப்புகளை நாடெங்கிலும் இருந்து பெற்றுள்ளது. விடுமுறைகாலத்தில் பிரதமரின் பிறந்தநாளை கொண்டாட பள்ளிகளை இயக்குவது ஹட்லர் காலத்தில் தான் நடைபெற்றது என்ற கருத்துக்களும் ட்விட்டரில் பகிரப்பட்டன. தங்களின் முடிவிற்கு பலத்த எதர்ப்பு கிளம்பியதை அடுத்து உத்திர பிரதேச மாநில அரசு இது போன்ற எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளது.

 

Comments are closed.