உத்திர பிரதேசம் BRD மருத்துவமனையில் தீவிபத்து: ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் சேதம்(?)

0

உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி அதித்யநாதின் சொந்த தொகுதியான கோரபூரில் உள்ள BRD மருத்துவமனியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சுமார் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகிச்தர்களுக்கு கட்டண பாக்கி இருப்பதாகவும் ஏற்கனவே வாங்கிய சிலிண்டர்களுக்கான கட்டணங்கள் சரிவர செலுத்தப்படவில்லை என்ற காரணத்தினால் ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தங்களின் இந்த நிர்வாக குறைபாட்டை மறைக்க, இந்த நெருக்கடியில் தனது சொந்த முயற்ச்சியில் தன்னுடைய பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிய மருத்துவர் கஃபில்கான் மீது உத்திர பிரதேச அரசு வழக்கு பதிவு செய்தது. ஆனால் அவர் குற்றமற்றவர் என்று பின்னர் விடுவிக்கப்பட்டார்.

தற்போது BRD மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணித்த குழந்தைகள் தொடர்பான முக்கிய கோப்புகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டதாக இந்தியா டைம்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. BRD மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அறையில் ஏற்பட்ட இந்த தீவிபத்து குறிப்பிட்ட ஆவணங்கள் அனைத்தையும் சேதப்படுத்தியகாக கூறப்படுகிறது. இன்னும் இந்த தீவிபத்திற்கான காரணம் அறியப்படவில்லை.

Comments are closed.