உத்திர பிரதேச முதல்வராகிறார் சர்ச்சை சாமியார் யோகி அதித்யநாத்

0

உத்திர பிரதேசத்தில் பாஜக வெற்றியை அடுத்து அம்மாநில முதல்வராக சர்ச்சைக்கு பெயர் போன யோகி அதித்யநாத் பாஜகவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அஜெய் சிங் என்ற இயற் பெயர் உடைய இவர் தனது வெறுப்புப் பேச்சிற்கு பெயர் போனவர். பல முறை பாஜக உடன் மோதலில் ஈடுபட்டு வந்த இவர் 2002 இல் ஹிந்து யுவ வாகினி என்ற அமைப்பை துவங்கினார். இந்த அமைப்பு மூலம் அப்பகுதி இந்துக்களிடையே இவருக்கு செல்வாக்கு அதிகரித்தது.

2005 ஆம் ஆண்டு தூய்மை படுத்துதல் திட்டம் என்கிற பெயரில் கிறிஸ்தவர்களை இந்துக்களாக மதம் மாற்றினார். இது போன்ற ஒரு சம்பவத்தில் சுமார் 1800 கிறிஸ்தவர்கள் உத்திர பிரதேசத்தின் இதாஹ் பகுதியில் இந்துக்களாக மதம் மாற்றப்பட்டனர். இந்த மதம் மாற்றத்தை “கர் வாபசி” என்று கூறி நியாயப்படுத்தினார் இவர். 2014 இல் மோடி பிரதமராக பதவி ஏற்றதும் இது போன்ற மதம் மாற்றங்கள் இன்னும் அதிகரித்தன. இந்தியாவில் மதம் மாற்றம் தடை செய்யபப்டும் வரை தனது இந்த செயல் தொடரும் என்று அவர் அறிவித்திருந்தார்.

2007 ஆம் ஆண்டு இவரது வெறுப்புப் பேச்சு காரணமாக உத்திர பிரதேசத்தின் கோரக்பூரில் கலவரம் ஏற்பட்டது. அதனையடுத்து இவர் கைது செய்யப்பட்டார். இவரது கைதை தொடர்ந்து இன்னும் மோசமடைந்த கலவரத்தில் மும்பை செல்லும் மும்பை கோரக்பூர் ரயில் பல பெட்டிகள் ஹிந்து யுவ வாகினி அமைப்பினரால் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை வரவேற்றவர் இவர். டிரம்ப் அறிவித்ததை போன்று முஸ்லிம் குடியேற்றத்திற்கு இந்தியாவில் தடை வித்திக்க வேண்டும் என்று இவர் கூறியிருந்தார்.(பார்க்க செய்தி)

யோகி அதித்யானத்தின் ஹிந்து யுவ வாகினி அமைப்பு முஸ்லிம் பெண்களை கடத்தி கற்பழித்து அவர்களை இந்துக்களுக்கு கட்டாய திருமணம் நடத்தி வைக்கின்றது என்று AIMMM கட்சி குற்றம் சாட்டியிருந்தது. (பார்க்க செய்தி)

இவரது ஆதரவாளர்கள் இறந்த முஸ்லிம் பெண்களின் உடலை தோண்டி எடுத்து கற்பழியுங்கள் என்று மேடையில் பேசியதும் அந்த மேடையில் யோகி அதித்யநாத் இருந்த செய்திகளும் 2015 இல் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தின.

இது போன்ற பின்னணியுள்ள இவர் தற்போதைய உத்திர பிரதேச தேர்தலின் போதே பாஜக உடன் மோதலில் ஈடுபட்டிருந்தார் என்று கூரப்பட்டது. தேர்தல் குறித்த பாஜக கூட்டத்தில் தனக்கு உத்திர பிரதேச முதலவர் பொறுப்பு தரவேண்டும் என்று கோரிக்கை அங்கு வைக்கப்பட்டதாகவும் அது அப்போது நிராகரிக்கப்பட்டதால் அந்த கூட்டத்தில் இருந்து அவர் பாதியில் வெளியேறியதும் செய்தியானது. (பார்க்க செய்தி).

இதன் பின்னர் உத்திர பிரதேசத்தின் பல இடங்களில் அவரது ஹிந்து யுவ வாகினி அமைப்பினர் பாஜகவை எதிர்த்து தேர்தலில் களம் காணப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு யோகி அதித்யநாத் மறுப்பு தெரிவித்திருந்தாலும் அது பாஜகவிற்கு அவர் கொடுத்த மறைமுக அழுத்தமாக நம்பப்படுகிறது. தற்போதைய பாஜக வின் இந்த முடிவும் இதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

Comments are closed.