உத்திர பிரதேச வாக்காளர்களை பாஜக பக்கம் திருப்ப நடத்தப்பட்ட போலி என்கெளவுண்டர்

0

கடந்த புதன் கிழமை காலை லக்னோவில் பதுங்கியிருந்த தீவிரவாதி என்று கூறப்பட்ட ஒருவரை 12 மணி நேரங்களுக்குப் பின்னர் உத்திர பிரதேச தீவிரவாத தடுப்புப் படை சுட்டுக் கொன்றது.

தவாறாக கைது செய்யப்படும் சிறுபான்மை மக்களுக்காக வாதிடும் ரிஹாய் மன்ச் என்ற வழக்கறிஞர் குழு கடந்த புதன் கிழமை லக்னோவில் நடந்த இந்த சம்பவம் குறித்து தங்களது சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் இது மக்களை பிளவுபடுத்தி அதனை தங்களுக்கு சாதகமாக்க மத்திய அரசின் நடவடிக்கை என்றும் அந்த குழு கூறியுள்ளது. இந்த அமைப்பு அரசியல் ஆதாயங்களுக்காக தவறாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யபப்டும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்காக போராடி வருகிறது. கடந்த 2008 பாட்லா ஹவுஸ் என்கெளவுண்டர் நடைபெற்றதற்கு பிறகு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த தேர்தலில் பாஜகவிற்கு உதவும் வைகையில் இது போன்ற ஒரு நடவடிக்கை வாக்குப் பதிவிற்கு முன்னர் நடக்கலாம் என்று தாங்கள் கணித்திருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரிஹாய் மன்ச் அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜீவ் யாதவ் கூறுகையில், இவர்களின் இந்த கதை முழுவதுமே ஓட்டைகளால் நிரம்பியுள்ளது என்றும் இது அவர்களுக்கு அரசியல் ஆதாயம் தேடித்தருவது என்றும் கூறியுள்ளார். இது போன்ற ஒரு முயற்சி சம்பல் பகுதியில் முதற்கட்ட வாக்குபதிவின் போது நடைபெற்றதாகவும் ஆனால் அப்பகுதி மக்கள் அவர்களின் திட்டத்தை முறியடித்துவிட்டனர் என்றும் தேர்தல் நேரத்தில் இது போன்ற ஒரு நடவடிக்கையை நடத்துவது மோடி அரசு இந்த தேர்தலில் ஜெயிக்க எத்தகைய நிர்பந்தத்தில் இருந்தது என்பதை உணர்த்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் போபால் உஜ்ஜைன் ரயிலில் செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற குண்டு வெடிப்பு அடுத்தடுத்த நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் இறுதியில் அது லக்னோ என்கெளவுண்டரில் வந்து முடிவடைந்துள்ளது என்றும் கூறிய அவர் போபால் உஜ்ஜைன் ரயிலில் வெடித்தது அந்த பெட்டியில் இருந்த டியூப் லைட் என்று பின்னர் தெரியவந்ததை குறிப்பிட்டார். இது குறித்து ஒரு பயணி வீடியோ ஒன்றில் பேசியதாகவும் அதையே எஸ்.பி. GRP.கிருஷ்ணவேணியும் உறுதி செய்திருந்ததையும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் நடந்தது தீவிரவாத தாக்குதல் என்று கூறியதும் மாறிப்போனது என்று அவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், உத்திர பிரதேச காவல்துறையினர் பல நேரடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

காவல்துறையினர் அந்த இளைஞறை சரணடைய செய்ய முயற்சித்ததாகவும் அவரது உறவினரை கொண்டு அவருடன் தொலைபேசியில் உரையாட வைத்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் காவல்துறையினருக்கு கொல்லப்பட்டவர் குறித்த தகவல்கள் அவரது உறவினரின் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்து யாரும் விளக்கம் தரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சில அறிக்கைகள், கொல்லப்பட்ட ஸைபுல்லாஹ் தனது சகோதரருடன் காவல்துறையினரால் பேச வைக்கப்பட்டார் என்றும் அப்போது அவரது சகோதரர் அவரை சரணடையுமாறு கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இது போன்ற ஒரு சம்பவம் நிகழும் என்று தாங்கள் கருதியதாகவும் உத்திர பிரதேசத்தில் பாஜக தனது அதிர்ஷ்டத்தை அதிகரிப்பதற்காக இது போன்ற செயலில் ஈடுபடலாம் என்று கருதப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆறாம் கட்ட வாக்குப்பதிவின் போது விசாரணை அமைப்புகள் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருபது போன்ற ஒரு சூழலை உருவாக்கினர். டில்லி காவல்துறையின் ஒரு குழு சம்பல் பகுதியில் தங்கி முஹம்மத் உஸ்மானை கைது செய்தது, இதனை தொடர்ந்து குஜராத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய பிரதேச காவல்துறை, போபால் ரயில் நிலையத்தில் உள்ள CCTV கேமரா மூலம் கண்டறியப்பட்ட நான்கு பேரை ஹோஷங்கபாத் மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர். இவர்கள் உத்திர பிரதேசத்தின் அலிகார் மற்றும் கான்பூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.